திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த புலிவலம் காவல் நிலையத்தில் பணிபுரிபவர் ஈஸ்வரன். மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜீப் டிரைவராக, பணியாற்றி வரும் இவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் அலாவுதீன், தனக்கு ஓய்வு அளிக்காமல், தொடர்ந்து வேலை கொடுத்ததாகவும், இதனால் ஈஸ்வரன், 'மன உளைச்சல் அதிகமாக உள்ளதால் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். என் சாவுக்கு இன்ஸ்பெக்டரே காரணம் என கடிதம் எழுதி, காவல்நிலையத்தில் கொடுத்துவிட்டு போக, சக போலீஸார் அதிர்ந்துபோனார்கள்.
தகவலறிந்த திருச்சி எஸ்.பி செந்தில்குமார் உள்ளிட்ட உயரதிகாரிகள், ஈஸ்வரனை நேரில் அழைத்து, விசாரணை நடத்தினர். இதனையடுத்து, ஈஸ்வரன், டிரைவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, புலிவலம் காவல்நிலையத்துக்கே அனுப்பப்பட்டுள்ளார். அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்படுவார் என்கிறார்கள்.
Comments
Post a Comment