இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லக்கண்ணுவின் மனைவி காலமானார். அவரது உடலுக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்
சென்னை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் மனைவி ரஞ்சிதம் அம்மாள் (65). இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ரஞ்சிதம் அம்மாள் இன்று காலை மரணம் அடைந்தார்.
அவரது உடல் தி.நகர் சி.ஐ.டி. நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று சி.ஐ.டி. நகருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நல்லக்கண்ணு குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார். அவருடன் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.
இதேபோல் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்களும் ரஞ்சிதம் அம்மாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் மனைவி ரஞ்சிதம் அம்மாள் (65). இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ரஞ்சிதம் அம்மாள் இன்று காலை மரணம் அடைந்தார்.
இதேபோல் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்களும் ரஞ்சிதம் அம்மாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
Comments
Post a Comment