கேரளாவில் திரும்பபெறப்பட்ட செல்லாத 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை பிளைவுட் தயாரிக்க தனியார் கம்பெனி கேட்டுள்ளதால் கொட்டேஷன் அனுப்பும் படி ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்:
நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த 8-ந்தேதி இரவு அறிவித்தது.
இதையடுத்து பொது மக்கள் தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புது நோட்டுகளை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் சுமார் 86 சதவீதம் அளவுக்கு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.
இவை அனைத்தையும் திரும்ப பெற்றுவரும் வங்கிகள் அவற்றை உடனடியாக ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைத்து வருகிறது.
இவ்வாறு நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கி கிளைகளில் பெறப்படும் செல்லாத ரூபாய் நோட்டுகளை ஒன்று சேர்த்தால் அவை இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை விட 300 மடங்கு உயரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நோட்டுகளை என்ன செய்வது என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக ஆலோசனை செய்து வருகிறார்கள்.
இதற்கு கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள வல்லப்பட்டினத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்று புதிய யோசனை தெரிவித்து உள்ளது.
அந்த நிறுவனம் பிளைவுட் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. அவர்கள் செல்லாத 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் அவற்றை மரக்கூழுடன் இணைத்து தரமான பிளைவுட், ஹாட்போர்டு மற்றும் சாப்ட் போர்டு ஆகியவற்றை தயாரிக்கலாம் என கூறியுள்ளது.
இந்த நிறுவனம் ஏற்கனவே இது போல கிழிந்த மற்றும் செல்லாத ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் இருந்து பெற்று அதனை கொண்டு பிளைவுட் போன்றவற்றை தயாரித்து உள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்த யோசனையை அந்த நிறுவனம் திருவனந்தபுரத்தில் உள்ள ரிசர்வ் வங்கி கிளைக்கு தெரிவித்து உள்ளது. அவர்கள் இது தொடர்பாக கொட்டேஷன் அனுப்பும் படியும், அதனை பரிசீலித்து முடிவு செய்வதாகவும் கூறியுள்ளது.
செல்லாத நோட்டுகளை முதலில் எரித்துவிடலாம் என ரிசர்வ் வங்கி முடிவு செய்திருந்ததாக கூறப்பட்டது. அவ்வாறு எரிக்கும் போது சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் என்பதால் அதனை பிளைவுட் தயாரிக்கும் நிறுவனத்திற்கு கொடுத்துவிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது

Comments
Post a Comment