புதிய 1000 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என மத்திய நிதித்துறை செயலாளர் சக்தி காந்த் அறிவித்துள்ளார்.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இரவு அறிவித்தார். அதோடு, புதிய 500, 2000 நோட்டுகள் வெளியிடப்படும் என்றும் கூறினார். அவரது அறிவிப்பை தொடர்ந்து, இன்று முதல் புதிய நோட்டுகள் பொதுத்துறை வங்கிகளில் வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக 2000 ரூபாய் நோட்டு வழங்கும் அரசு, 1000 ரூபாய் நோட்டுகளை வழங்காதது ஏன் என்ற கேள்விகள் எழும்பியது.
இந்த நிலையில், புதிய 1000 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என மத்திய நிதித்துறை செயலாளர் சக்தி காந்த் இன்று அறிவித்துள்ளார். மேலும், புதிய வடிவத்தில், புதிய வண்ணத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், சில மாதங்களில் 1000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment