14-ம் தேதி வரை நீட்டிப்பு: சுங்கச்சாவடிகளில் மேலும் 3 நாட்களுக்கு கட்டணம் ரத்து - மத்திய அரசு அறிவிப்பு



நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டண விலக்கு மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 14-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
500 ரூபாய், 1,000 ரூபாய் செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8-ம் தேதி இரவு அறிவித் தது. இது உடனே அமலுக்கும் வந்ததால், பணத்தை மாற்ற முடி யாமல் மக்கள் சிரமப்பட்டனர். இதையடுத்து, நாடுமுழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் 11-ம் தேதி வரை கட்டணம் வசூலிக்க கூடாது என மத்திய அரசு அறிவித்தது. வங்கிகள், ஏடிஎம்கள் இன்னும் முழுமையாக செயல்படாததால், சுங்கச்சாவடி கட்டண விலக்கை மேலும் நீட்டிக்க கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் நவம்பர் 11-ம் தேதி வரை கட்டணம் வசூலிக்கப் படுவது நிறுத்தி வைக்கப் பட்டது. இது மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. அனைத்து சுங்கச்சாவடிகளிலும் 14-ம் தேதி நள்ளிரவு வரை கட்டணம் வசூலிக் கப்படாது’’ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Comments