கள்ளக்குறிச்சி அருகே காலாவதியான சாக்லேட் சாப்பிட்ட 186 பேர் மாணவ, மாணவிகள் மயக்க மடைந்தனர். இதில் 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டம், கள்ள குறிச்சி அருகே கூத்தக்குடி புற வழிச் சாலையில் நேற்று காலை சாக்லேட்கள் கொட்டிக் கிடந்தன. அந்த வழியே சென்ற சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர்கள் இந்த சாக்லேட்களை எடுத்து சாப்பிட்டுக் கொண்டே அங்கு உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் அரசு மேநிலைப் பள்ளிக்குச் சென்றுள்ளனர்.
பள்ளியில் இருந்தபோது மாணவ, மாணவிகள் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மொத் தம் 186 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நஸ்ரின்ஷா பேகம், முனுசாமி உள்ளிட்ட ஆசிரியர்கள் அங்கு உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
ரிஷிவந்தியம், தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்களில் இருந்து கூடு தலாக டாக்டர்களை வரவழைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இத்தகவல் அறிந்த வரஞ்சரம் போலீஸார், சாக்லேட் கொட்டிக் கிடந்த இடத்தை பார்வையிட்டனர். மாணவர்கள் நிலைமை சரியான தைத் தொடர்ந்து அவர்களது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப் பட்டனர். தொடர்ந்து மயக்க நிலை யில் இருந்த நவீனா, அபிநயா, பிரியதர்ஷினி, பேரரசு ஆகிய 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. காலாவதியான சாக்லெட் களை உணவுப் பாது காப்பு அலுவலர்கள் சேகரித்து ஆய்வுக்காக சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
காலாவதியான சாக்லேட் சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவிகள்.
Comments
Post a Comment