ராஜ்காட்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 537 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.
முன்னதாக டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் மூன்று பேர் சதம் விளாசினர். ஜோ ரூட் 124(180), மொயீன் அலி 117(213), பென் ஸ்டோக்ஸ் 128(235) ரன்கள் எடுத்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியில் மொயீன் அலி 99 (192) ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 19(41) ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து 2வது நாள் ஆட்டத்தை துவங்கிய இங்கிலாந்து அணியில் மொயீன் அலி, பென் ஸ்டோக்சின் சதத்தால் இங்கிலாந்து அணியின் ரன்வேகம் ஏறியது. இறுதியில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 537 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளும், ஷமி, யாதவ், அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளையும், மிஸ்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணியில் கம்பீர் 28(68) ரன்களுடனும், விஜய் 25(70) ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Comments
Post a Comment