சென்னையில் புதிய 2,000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்துக்கு வந்தன: நீடிக்கும் சிக்கல்


சென்னை: சென்னையில் உள்ள வங்கிகள் மூலம், பொதுமக்களுக்கு ரூ.4000 வரை புதிய நோட்டுக்கள் வழங்கும் பணி தொடங்கிவிட்டது.
இன்று காலை முதலே வங்கிகளில் பழைய நோட்டுக்களை கொடுத்து புதிய நோட்டுக்களை மாற்ற ஏராளமானோர் குவிந்தனர்.
சில வங்கிகளில் 4 ஆயிரத்துக்கு வெறும் 100 ரூபாய் நோட்டுக்களே வழங்கப்பட்டன. புதிய நோட்டுக்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது.
ஒரு சில வங்கிகளில் 4 ஆயிரத்துக்கு 1 இரண்டாயிரம் ரூபாய் நோட்டும், 2 ஆயிரத்துக்கு 100 ரூபாய் நோட்டுக்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
கையில் 100 ரூபாய் நோட்டுக்களை வாங்கிய பொதுமக்கள் மிக மகிழ்ச்சியோடு வங்கியில் இருந்து செல்வதைக் காண முடிகிறது.
புதிதாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் பெற்றவர்கள் புதிய நோட்டுக்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தாலும், இந்த நோட்டை எங்கு கொடுத்து மாற்ற முடியும். எங்குமே சில்லறை இல்லையே என்று கவலை அடைந்துள்ளனர்.



Comments