சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வாங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ரூ 2,000 நோட்டை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
வங்கிகளில் பழைய ரூ.500, ரூ 1,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு புதிய ரூபாய் நோட்டுகளைப் பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்ற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
சென்னை ரிசர்வ் வங்கியில் பழைய 500, 1000 நோட்டுகளை கொடுத்து புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற மொத்தம் 8 கவுண்டர்களில் திறக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதில் 2000 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. சென்னை ரிசர்வ் வங்கியில் மாலை நான்கு மணி வரை பழைய நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம்.
சென்னையில் உள்ள அனைத்து வங்கிகளிலும் அந்தந்த வங்கிக் கணக்கு உள்ளவர்கள் இன்று மாலை 4 மணி வரை பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி 2000 ரூபாய் புதிய நோட்டுகளை பெறலாம். இதற்கென அனைத்து வங்கிகளிலும் விண்ணப்பங்கள் கொடுப்பட்டு வருகின்றன. அந்தந்த குறிப்பிட்ட வங்கிகளில் கணக்கு இல்லாதவர்கள் மதியத்திற்கு மேல் உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக் கொள்ளலாம் என வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன. காலையிலிருந்து மக்கள் கூட்டம் வங்கிகளில் அலைமோதி வருவதால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment