2,000 ரூபாய் நோட்டில் தவறாக பொறிக்கப்பட்டதா உருது மொழி வார்த்தைகள்?

நாடு முழுவதும் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துள்ளன. இந்த நோட்டில் உருது மொழி எழுத்துக்கள் தவறாக பொறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரூபாய் நோட்டுகளில் 15 மொழிகளில் அதன் மதிப்பு குறிப்பிடப்படும். இதில் புதிதாக புழக்கத்துக்கு வந்துள்ள 2,000 ரூபாய் நோட்டில் 'தோ ஹசார் ருப்யேக்கு' பதிலாக 'தோ பஜார் ருப்யே' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக உருது மொழி அறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  மேலும் இதனால் அதன் பொருளே மாறியுள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Comments