தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய 2000 ரூபாய் நோட்டில் ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கடந்த 8 ஆம் தேதி மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. அதற்கு மாற்று வழியாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.
புதிய 2ஆயிரம் நோட்டு வந்ததில் இருந்து பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக தகவல் வெளியானது.
முதலில் புதிய நோட்டை பார்த்த மக்கள் அதில் இந்தி மொழியில் 2000 ரூபாய் என்பது தவறாக எழுதப்பட்டிருப்பதாக ட்விட்டரில் தெரிவித்தனர். ஒரு சிலர் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் புகார் அளித்தனர்.
ரூபாய் நோட்டின் எழுத்துப் பிழை பற்றிய உண்மை தெரிய வந்துள்ளது. அது எழுத்துப் பிழை இல்லையாம். ரூபாய் நோட்டின் பின்புறம் 2000 ரூபாய் என்பது தமிழ் உள்பட 15 மொழிகளில் எழுதப்பட்டுள்ளது.
இந்தி மொழி நோட்டு முழுவதும் இருப்பதால் அது அந்த 15 மொழி பட்டியலில் இல்லை. இது தெரியாமல் கொங்கனி மொழியில் எழுதப்பட்டதை மக்கள் இந்தி என தவறாக புரிந்து கொண்டு எழுத்துப் பிழை இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
நேற்று பிரபல தனியார் மராத்தி டி.வி. செய்தி சேனல் ஒன்றில் புதிய 2 ஆயிரம் நோட்டில் சாயம் போவதாக செய்தி ஒளிபரப்பப்பட்டது. அந்த செய்தியில், ஒருவர் ஈரமான வெள்ளை துணியை வைத்து புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டில் தேய்க்கிறார். அப்போது, அந்த நோட்டில் உள்ள ‘பிங்க்’ கலர் துணியில் படிகிறது. தனியார் டி.வி. சேனலில் வெளியான இந்த செய்தியால் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த செய்தியை பார்த்த பொதுமக்கள் சிலர் தங்கள் வீடுகளில் ஈரத்துணியை தொட்டு புதிய ரூ.2 ஆயிரம் நோட்டில் சாயம் போகிறதா? என சோதனை செய்துபார்த்தனர். அப்போது புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டில் சாயம் போவதாக மும்பையை சேர்ந்த இல்லத்தரசி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் தற்போது வெளியடப்பட்டுள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
ஆனால், புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அனைத்திலும், புதிய ரிசர்வ் வங்கி கவர்னரான உர்ஜித் படேல் கையெழுத்தே உள்ளது.
இவர் கவர்னராக பொறுப்பேற்று 65 நாட்கள் தான் ஆகிறது. அதாவது இவர் கடந்த செப்டம்பர் 4 ஆம் திகதி தான் கவர்னராக பொறுப்பேற்றுள்ளார்.
அவ்வாறு இருக்கையில், புதிய நோட்டுகள் 6 மாதத்திற்கு முன்னதாக அச்சடிக்கப்பட்டிருந்தால் அப்போதைய கவர்னர் ரகுராம் ராஜன் கையெழுத்தல்லவா இருந்திருக்க வேண்டும்.
இவர் கையெழுத்து எப்படி வந்தது என சந்தேகம் எழுப்பி பெரும்பாலானோர் சமூக வலைதளத்தில் பதிவுகளை மேற்கொள்கின்றனர்.
சமீபத்தில் போலியான ஆவணங்கள் மூலம் வசித்துவந்ததாக கூறி குலாவை, பாகிஸ்தான் அரசு நாடு கடத்தியது.
பச்சை நிறக் கண்களால் உலகின் கவனம் ஈர்த்த குலா, கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். நாற்பது வயதை எட்டியுள்ள அவருக்கு இந்தியாவில் உள்ள பெங்களூரு மருத்துவமனை ஒன்றில் இலவச சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை ட்விட்டரில் வெளியிட்டுள்ள இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் ஷைதா அபாதி, அதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாவும் பதிவிட்டுள்ளார்.
கடந்த 1984ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள ஒரு அகதிகள் முகாமில் சரபத் குலா இருந்த போது எடுக்கப்பட்ட அவரது புகைப்படம் புகழ்பெற்ற ’நேஷனல் ஜியோகிராபிக்’ மேகசின் பத்திரிக்கையின் அட்டைப் படமாக மாறியது.
சிலர் இப்புகைப்படத்தை உலக பிரசித்தி பெற்ற மோனாலிசாவின் புகைப்படத்துடன் ஒப்பிட்டும் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது

Comments
Post a Comment