Skip to main content

ரூ.20.55 லட்சம் பறிமுதல் விவகாரம்: பாஜக பிரமுகரிடம் வருமான வரி அதிகாரிகள் விசாரணை


சேலத்தில் போலீஸாரின் வாகனச் சோதனையில் ரூ.20.55 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட பாஜக பிரமுகரிடம் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று நாள் முழுவதும் விசாரணை நடத்தினர்.
கடந்த இருதினங்களுக்கு முன்னர் சேலம் குமாரசாமிப் பட்டியில் அஸ்தம்பட்டி இன்ஸ் பெக்டர் கண்ணன் தலைமையி லான போலீஸார் வாகனச் சோத னையில் ஈடுபட்டபோது, பாஜக இளைஞரணி கோட்ட பொறுப் பாளர் அருண் ராம்(36) வந்த காரில் ரூ.20.55 லட்சம் இருந்தது. அதில், ரூ.18 லட்சத்து 52 ஆயிரம் மதிப்புக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தன.
இதுகுறித்து போலீஸார் அருண் ராமிடம் விசாரித்தபோது அவர், வருமான வரித்துறையில் கணக்கு சமர்ப்பித்து, தொகையை பெற்றுக் கொள்வதாகத் தெரிவித் தார். இதையடுத்து போலீஸார் பணத்தை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், சேலம் வருமான வரித் துறை ஆணையாளர் அலுவலக புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் எஸ்.என்.சுரேஷ், ஆய்வாளர் வெங்க டேசன் உள்ளிட்ட அதிகாரிகள் குழு, சேலம் பெரமனூர் நாராயணப்பிள்ளை சாலையில் உள்ள அருண் ராமின் வீட்டுக்கு நேற்று சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை நாள் முழுவதும் நீடித்தது.
இதனிடையே, அஸ்தம்பட்டி போலீஸார் அருண் ராமிடம் பறிமுதல் செய்த ரூ.20.55 லட்சத்தை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்து, புகார் அறிக்கை தாக்கல் செய்தனர்.

Comments