சென்னை: சென்னையில் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் அதிரடி சோதனையில், 25 கோடி ரூபாய் முறைகேடாக கணக்கு காட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. மத்திய அரசு, 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக அறிவித்த உடன், பழைய நோட்டுக்களை கொடுத்து, ஏராளமான அளவில் தங்கம் வாங்குவதும், ‛ஹவாலா' எனப்படும் சட்டவிரோத பண பரிமாற்ற முறையில் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற முயற்சிப்பதும் நடந்து வருகிறது.
ஹவாலா' பேர்வழிகள்:
ஹவாலா' பேர்வழிகள்:
இது குறித்து தகவல் அறிந்ததும், சென்னை பாரி முனை பகுதியில் உள்ள நகை கடைகள், ‛ஹவாலா' பேர்வழிகளின் வீடுகள் என, எட்டு இடங்களில் கடந்த 2 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்றும், நான்கு இடங்களில் சோதனை நடந்தது. சோதனையின் போது, கணக்கில் வராத 25 கோடி ரூபாய் சிக்கி உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment