Skip to main content

கும்மிடிப்பூண்டி அருகே பதற்றம்: மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் கொலை

  • வல்லம்பேடு மீனவ கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார். | படம்: இரா.நாகராஜன்
கும்மிடிப்பூண்டி அருகே மீனவ கிராமத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், 2 பேர் கொலை செய்யப்பட்டதால் அப் பகுதியில்பதற்றம் நிலவுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள வல்லம்பேடு மீனவ கிராமத்தினர், பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, வல்லம்பேடு கிராமத்தில் செயல்படும் மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகவும், ஊர் தலைவராகவும் சத்திரத்தான்(53) என்பவர் இருந்து வந்தார்.
அப்போது, மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரண நிதி, கூட்டுறவுச் சங்க நிதி உதவி மற்றும் படவேட்டம்மன் கோயில் நிதியில் முறைகேடு போன்ற காரணங்களால் ஊர் தலைவர் பதவியில் இருந்து சத்திரத்தானை பொதுமக்களின் ஒரு தரப்பினர் நீக்கினர். இதனையடுத்து, ஊர் தலைவர் பதவியில் எல்லையன் என்பவர் நியமிக்கப்பட்டார்.
இதனால் கோயில் திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகளின்போது, சத்திரத்தான் மற்றும் எல்லையன் ஆகிய இரு தரப்பினருக்கு இடையே மோதல் தொடர்ந்து வந்தது. கடந்த தீபாவளி அன்று இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், 2 பேர் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதை யடுத்து, கடந்த வாரம் பொன்னேரி சார் ஆட்சியர் தண்டபாணி மற்றும் மீனவர் சங்க நிர்வாகிகள், இரு தரப்பினரிடையே சமாதானம் செய்து வைத்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வல்லம்பேடு படவேட்டம்மன் கோயில் முன்பு எல்லையன் தரப்பினர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு ஆயுதங்களுடன் வந்த மற்றொரு தரப்பினர் அவர்களை தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட மோதலில் எல்லையன் தரப்பைச் சேர்ந்த குணசேகர், அண்ணாதுரை, தேசப்பன், சிவசங்கர், கோபி ஆகிய 5 பேரும் படுகாயமடைந்தனர். 5 பேரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த மோதல் சம்பவத்தில் காயமடைந்த மேலும் 6 பேர், கும்மிடிப்பூண்டி மற்றும் பொன் னேரி அரசு மருத்துவமனைககளில் அனுமதிக்கப்பட்டனர். ஆரம்பாக் கம் போலீஸார் மற்றும் திருவள் ளூர் மாவட்ட எஸ்பி சாம்சன், பொன்னேரி சார் ஆட்சியர் தண்ட பாணி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சி யர் ஐவண்ணன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேரில் அண்ணா துரை, குணசேகரன் ஆகியோர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற 3 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரு கின்றனர். கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 6 பேரில் 5 பேர் வீடு திரும்பினர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக் குப் பதிவு செய்துள்ள ஆரம்பாக்கம் போலீஸார், சத்திரத்தானின் ஆதர வாளரான மணிகண்டன் மற்றும் 5 பெண்களிடம் விசாரித்து வரு கின்றனர். தலைமறைவாக உள்ள 20-க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர்.
வல்லம்பேடு மீனவ கிராமத் தில் தொடர்ந்து பதற்றம் நீடிப்ப தால் ஏடிஎஸ்பி ஸ்டாலின் தலை மையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோயில் நிதி முறைகேடு தொடர்பாக இரு பிரிவினரிடையே தொடர்ந்து மோதல் இருந்துவந்தது

Comments