பாகுபலி-2 படத்தின் காட்சிகள் திருட்டுத்தனமாக வெளியானதையடுத்து இணையதளத்தில் அதை நீக்கியுள்ளனர். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போ
ராஜமவுலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘பாகுபலி-2’. இது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இதில் பிரபாஸ்-அனுஷ்கா நடித்துள்ள முக்கிய காட்சிகள் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியானது.
அதில், பிரபாஸ், அனுஷ்கா இருவரும் படை வீரர்களுடனும் எதிரிகளுடனும் வாக்குவாதம் செய்கிறார்கள். பின்னர் அவர்களை தாக்க தயாராகிறார்கள். முதல் பாகத்தில் அனுஷ்கா அழுக்கான புடவையுடன் விலங்கிட்டபடி இருந்தார். இதில் இளவரசி தோற்றத்தில் உள்ள அனுஷ்கா அழகாக இருக்கிறார்.
இதையடுத்து, இந்த காட்சிகளை யூடியூப்பில் வெளியிட்டது கிராபிக்ஸ் வடிவமைப்பாளர் கிருஷ்ணா தயானந்த் சவுத்ரி என்பது தெரியவந்தது. படத் தயாரிப்பாளர் கண்டலசோபு புகாரின் பேரில் தயானந்த் சவுத்ரி கைது செய்யப்பட்டார். ‘பாகுபலி-2’ படத்தின் 9 நிமிட காட்சிகளை திருடினார். அதில் 2.5 நிமிட காட்சிகளை யூடியூப்பில் வெளியிட்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
சைபர் கிரைம் போலீசார் எடுத்த நடவடிக்கையை அடுத்து யூடியூப்பில் வெளியான ‘பாகுபலி-2’ காட்சிகள் நீக்கப்பட்டன
Comments
Post a Comment