வங்கிகளுக்கு டிசம்பர் 30 வரை விடுமுறையில்லை

விடுமுறை நாட்கள் உள்பட வங்கிகள் டிசம்பர் 30 வரை விடுமுறையில்லாமல் இயங்கும் ரிசர்வ் வங்கி தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துள்ள நிலையில், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே வங்கிகளுக்கு அடுத்த மாதம் டிசம்பர் 30-ஆம் தேதி வரை விடுமுறை இல்லை என ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல மேலாளர் சதக்கதுல்லா தெரிவித்துள்ளார். குறிப்பாக விடுமுறை நாட்கள் உள்பட அனைத்து நாட்களும் வங்கிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகளை கால அவகாசம் உள்ளதால் இந்த நடவடிக்கை எனக் கூறப்பட்டுள்ளது.

Comments