சுங்க கட்டணம் வசூல் ரத்தை 31 வரை நீட்டிக்க கோரிக்கை: நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம் செய்ய லாரி உரிமையார்கள் முடிவு


சேலம்: சுங்க கட்டணம் வசூல் ரத்து செய்தததை டிசம்பர் 31ம் தேதி வரை மத்திய அரசு நீட்டிக்காவிட்டால் நள்ளிரவு முதல் லாரிகள் ஓடாது என்று லாரி உரிமையார்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 351 சுங்கச்சாவடிகள் மூலம் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. 

நாடு முழுவதும் இன்னும் பணத்தட்டுப்பாட்டை போக்க முடியாத நிலையில் சுங்க கட்டணம் வசூல் நிறுத்தத்தை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்காவிட்டால் இன்று நள்ளிரவு முதல் லாரிகள் ஓடாது என்று லாரி உரிமையார்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தென் மாநில லாரி உரிமையாளர் சங்கப் பொதுச்செயலாளர் சண்முகப்பா சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மேலும் சுங்கச் சாவடிகளில் 8 மணி நேரம் வரை லாரிகள் நிற்பதால் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 

Comments