31 வருடங்களுக்கு பிறகு சாதிக்கும் முனைப்பில் நியூஸி.


பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 31 வருடங் களுக்கு பிறகு முதன்முறையாக கைப்பற்றும் முனைப்பில் நியூஸிலாந்து அணி உள்ளது.
இரு அணிகள் இடையே இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஹாமில்டனில் தொடங்குகிறது.
முதல் போட்டியில் மெதுவாக பந்து வீசியதால் மிஸ்பா உல்-ஹக் குக்கு ஒரு ஆட்டத்தில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி அசார் அலி தலைமையில் களமிறங்குகிறது.
கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூஸி லாந்து அணி 1985-ம் ஆண்டு கைப்பற்றியிருந்தது. இம்முறை தொடரை வென்று சாதிக்கும் முனைப்பில் வில்லியம்சன் தலை மையில் களமிறங்குகிறது நியூஸி லாந்து அணி. அந்த அணி இந்த டெஸ்ட்டை டிரா செய்தாலே தொடரை வென்றுவிடலாம்

Comments