இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 537 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இதில் நிதனமாக ஆடிய புஜாரா,விஜய் ஆகிய இருவரும் சதமடித்தனர்.
இதைத்தொடர்ந்து 4-வது நாள் ஆட்டத்திலும் இந்தியா முதல் இன்னிங்ஸை தொடர்ந்து இந்தியாவின் கேப்டன் விராட் கோஹ்லி 40,ரகானே 13 மற்றும் சாஹா 35 ரன்கள் எடுத்து அவுட் ஆகி அஸ்வின் அதிரடி காட்டினார். அவர் 70 ரன்கள் எடுத்தார். இதையடுத்து இந்தியா முதல் இன்னிங்ஸில் 488 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸில் இந்தியா இங்கிலாந்தை விட 49 ரன்கள் பின்தங்கியுள்ளது.
Comments
Post a Comment