500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த நிலையில், சில பெரிய வணிக நிறுவனங்கள் மட்டும் வியாபாரத்துக்காக அவைகளை பெற்று வருகின்றன.
கடந்த 8-ம் தேதி நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. 9-ம் தேதி வங்கிகளும், ஏ.டி.எம் மையங்களும் மூடப்பட்டதால் மக்கள் கடுமையாக சிரமப்பட்டனர். 10-ம் தேதி முதல் வங்கிகளில் 1000, 500 புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்தனர். பழைய 500, 1000 ரூபாயை கொடுத்து ஒரு நாளைக்கு ஒரு நபர், 4000 ரூபாய் வரை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு பணத்தை மாற்றுவதற்குரிய விண்ணப்ப படிவத்துடன் ஆதார் கார்டு, பான் கார்டு, ரேசன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், அரசு ஊழியர்களின் அடையாள அட்டை ஆகிய ஏதாவது ஒன்றின் ஒரிஜினலை, வங்கி ஊழியரிடம் காண்பிக்க வேண்டும்.

புதிய ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. இன்று முதல் ஏ.டி.எம். மையங்களும் செயல்பட்டதால் மக்களின் பணத்தேவை ஓரளவு சமாளிக்கப்பட்டது. இருப்பினும் மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால் வணிக நிறுவனங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டன. சில்லறை பிரச்னை, 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க முடியாததால் வியாபாரத்தில் சரிவு ஏற்பட்டது. உதாரணத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை வியாபாரமான கடைகளில் ஆயிரம் ரூபாய்க்கு கூட வியாபாரம் இல்லை. மேலும் சில்லறை கொடுக்க முடியாமல் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. இதே நேரத்தில் சூப்பர் மார்க்கெட் போன்ற பெரிய வணிக நிறுவனங்கள், தங்களது வியாபாரம் பாதிக்காமலிருக்க 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாடிக்கையாளர்களிடமிருந்து ரகசியமாக பெறுகின்றனர். இத்தகைய கடைகளில் பொருட்கள் வாங்கினால் 500, 1000 ரூபாய் மதிப்பில் பர்சேஸ் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை மட்டும் சூப்பர் மார்க்கெட் தரப்பில் சொல்லப்படுகிறது. 100, 50, 20, 10 ரூபாய் போன்ற சில்லறைகள் இல்லை என்று மட்டுமே அங்குள்ளவர்கள் சொல்கின்றனர்.
இதுகுறித்து சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், "மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் கடந்த இரண்டு தினங்களாக வியாபாரம் இல்லை. புதிய வரவாக வந்துள்ள 2000 ரூபாய் நோட்டுக்கு சில்லறை கொடுக்கவும் எங்களிடம் வழியில்லை. கடை வாடகை, ஊழியர்கள் சம்பளம் என பல செலவுகள் இருப்பதால் வேறுவழியின்றி 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்கி கொள்கிறோம். அதற்கு சில்லறை மட்டும் எங்களால் கொடுக்க முடியவில்லை. 500, 2000 புதிய ரூபாய் நோட்டுகள் தாராளமாக பயன்பாட்டிற்கு வந்து விட்டால் எங்களது நிலைமை சரியாகி விடும். நாங்கள் பெறும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்து விடுகிறோம். ஏற்கனவே முறைப்படி நாங்கள் வருமானவரி மற்றும் விற்பனைவரி செலுத்துவதால் பிரச்னை எதுவும் இல்லை" என்றார்.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் கூறுகையில், "மத்திய அரசு 500, 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்தப்பிறகு அந்த ரூபாய் நோட்டுகளை வாங்குவது அவரவர் விருப்பம். இந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கால அவகாசம் கொடுத்துள்ளதால் அதை அவர்கள் வாங்கி மாற்றிக் கொள்கின்றனர். மக்களின் நலன்கருதி மருத்துவமனை, மெடிக்கல், பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் இந்த ரூபாய் நோட்டுகள் பெறப்படுகின்றன. மின்சார வாரியமும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலும் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் வாங்கப்படுகின்றன. அதுபோல சில வணிக நிறுவனங்களிலும் வாங்கப்படுகின்றன" என்றனர்.
Comments
Post a Comment