தமிழகத்திலேயே முதல் முறையாக சேலம் தனியார் வங்கியில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம்
சேலம்: தமிழகத்தில் முதல் முறையாக சேலத்தில் உள்ள தனியார் வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு புதிய 500 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டன. சேலம் தேர் வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி கிளைக்கு ரூ.4 லட்சத்திற்கு புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்தன. ஒரு மணி நேரத்திற்குள் அவை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டு விட்டது. ஒரு சில மாநிலங்களில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தாலும் தமிழகத்திற்கு மட்டும் கடந்த சில நாட்களாக புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கப் பெறாமல் இருந்தது. கடந்த 8-ம் தேதியில் நள்ளிரவில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிக்கப்பட்ட பிறகு மக்கள், தங்களின் அன்றாட தேவைக்கான செலவுகளை கூட சமாளி்க்க முடியாமல் அல்லாடி வருகின்றனர். ATM -களில் பணம் நிரப்பாமல் ஒருபுறமும், வங்கியில் ஒரு நாளைக்கு இவ்வளவு தான் பழைய பணத்தை மாற்ற முடியும் என்று அறிவித்து ஒருபுறமும் என பல்வேறு வகையிலும் மக்கள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் ATM மற்றும் வங்கிகளில் புதிய 2000 ரூபாய்கள் மட்டுமே அளிக்கப்படுவதால் அதற்கேற்ப சில்லரை இல்லாமல் வியாபாரிகளும் பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றனர்.
உரிய நேரத்தில் உரிய அளவில் புதிய 500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடாமல் இருப்பதே இதற்கு காரணம் என பல்வேறு தரப்பினரும் கொந்தளித்தனர். மேலும் சில்லறை நோட்டுக்களை புழக்கத்தில் விடுவதில் மத்திய அரசு தாமதித்து வருகிறது. இதனால் நாடெங்கிலும் பணத்தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் சேலத்தில் உள்ள தனியார் வங்கிக்கு மட்டும் குறைந்த அளவில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன. எனினும் சேலத்திலேயே மற்ற வங்கிகளுக்கோ , மற்ற ஊர்களில் உள்ள வங்கிகளுக்கோ இன்னும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்னும் சில தினங்களி்ல் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு விட வேண்டும் என மக்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அப்போது தான் ஓரளவேனும் பணத்தட்டுப்பாடு இன்னலில் இருந்து மீள முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

Comments
Post a Comment