500 ரூபாய் புழங்க ஆரம்பித்ததே சில நாட்களுக்கு முன்புதான். இந்நிலையில், இரண்டு விதமான 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. சில புதிய 500 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் உருவத்துக்கு அருகே காந்தியின் நிழல் தெரிகிறதாம். சில நோட்டுகளில் எழுத்துகளின் அலைன்மென்ட் சீராக இல்லை என்று சொல்லப்படுகிறது. சிலருக்கு வேறு Shadeகளில் கூட புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைத்துள்ளன.
இது குறித்து ரிசர்வ் வங்கியின் செய்தி தொடர்பாளர் அல்பனா கில்லாவாலா, 'அவசர அவசரமாக தயார் செய்ததால், பிரின்ட்டிங் மிஸ்டேக் ஆகியிருக்கும். இரண்டுமே செல்லும்' என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறியுள்ளார். மேலும், இந்த ரூபாய் நோட்டுகள் செல்லும் என்றும், ரிசர்வ் வங்கியிடம் திரும்பவும் ஒப்படைக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
Comments
Post a Comment