கறுப்புப் பணத்தை ஒழிக்க பத்திரப்பதிவு கட்டணத்தை 50% குறைக்க வேண்டும்: அசோசேம்

கறுப்புப் பணம் உருவாவதை மேலும் தடுக்க வேண்டுமென்றால் ரியல் எஸ்டேட் துறையில் பத்திரப் பதிவு கட்டணத்தை 50% குறைக்க வேண்டும் என்று தொழில்துறை அமைப்பான அசோசேம் தெரிவித்துள்ளது. வீடுகள் மற்றும் வணிக இடத்திற்கான ஒப்பந்தத்தில் குறைவான பத்திரப்பதிவு கட்டணம் விதிக்கப்படும் போது, குறைந்த மதிப்பை குறிப்பிட்டு இடம் வாங்குபவர்களை அகற்றமுடியும் என்று அசோசேம் கூறியுள்ளது.
இந்த துறையில் பெருமளவில் பணம் உருவாவதற்கு காரணம் பத்திரப்பதிவு கட்டணம் அதிகமாக இருப்பது. 6-7 சதவீத பத்திரப்பதிவு கட்டணத்துடன் ரூ.1-1.50 கோடி மதிப் புள்ள ஒரு பிளாட்டை வாங்குபவர், பல்வேறு அரசாங்க விதிப்புகள், பதிவு கட்டணம் மற்றும் வழக்கறி ஞர் கட்டணம் என ரூ.10 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியுள் ளது. இடத்தை விற்பவர் பத்திரப் பதிவு மதிப்பு அடிப்படையில் மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். அதனால் உண்மையான பரிவர்த்தனை மதிப்பை காட்டிலும் குறைந்த மதிப்பில் பத்திரப்பதிவு நடக்கிறது. இது விற்பவருக்கும் வாங்குபவருக்கும் மிகப் பெரிய ஆதாயமாக இருக்கிறது. இதன் காரணமாக சந்தை மதிப்பை விட குறைவான மதிப்பில் தொடர்ந்து பத்திரப்பதிவு நடந்து கொண்டு இருக்கிறது. பத்திரப்பதிவு கட்டணம் குறைவாக இருக்கும் போது இதுபோன்று மதிப்பைக் குறைக்க வேண்டிய தேவை இருக்காது என்று அசோசேம் கூறியுள்ளது.
ஆனால் மாநில அரசுகள் தானாக முன்வந்து 50% பத்திரப்பதிவு கட்டணத்தைக் குறைக்க வேண்டும். இதன்மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும், மந்தமாக இருக்கும் இந்த துறைக்கு பயனுள்ளதாகவும் இருக்கும் என்று அசோசேம் பொதுச் செயலாளர் டி.எஸ். ராவத் தெரிவித்துள்ளார்

Comments