சத்யஜோதி தயாரிப்பில் தல 57 படத்தை மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் அஜித், காஜல் அகர்வால் நடித்து வருகின்றனர். வேதாளம் படத்துக்கு பிறகு ஓய்வில் இருந்த “தல 57” படம் ஜூன் மாதம் படபிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவிலும், இரண்டாம் கட்டமாக சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் விவேக் ஓபராய் நடிப்பதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விவேக் ஓபராய் தல 57 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்தார். மேலும் அஜித்தை நான் அண்ணன் என்று தான் கூப்பிடுவேன் என்றும் தெரிவித்தார். அவருடன் நடிக்க ஆவலாக இருப்பதாகவும் விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment