உள்ளூர் போட்டி ஒன்றில் பதினான்கு வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக ஐந்து வயது சிறுவன், விளையாடிய வீடியோ தெறி வைரலாகி வருகிறது.
சாதிக்கத் தடையில்லை எனச் சொல்வார்கள், பதினைந்து வயதில் சச்சின் டெண்டுல்கர் முதல் தர போட்டிகளில் ஆடிய போது, மைதானத்துக்குள் இருந்தவர்களும் சரி, எதிரணி வீரர்களும் சரி, ஏளனமாக பார்த்தார்கள், சிரித்தார்கள். மிகவும் குட்டையாக இருந்த சச்சின், அதன் பின்னர் ஆறரை அடி உயர பவுலர்களை, அவர்களின் யார்க்கர்களை கலங்கடித்தது தனி வரலாறு.
2002 ஆம் ஆண்டு, இங்கிலாந்து அணிக்கு, இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சமயம் அது. பார்த்தீவ் படேல் விக்கெட் கீப்பராக இந்தியாவுக்கு களமிறங்கிய சமயத்தில், அவரது உயரத்தை ஏளனமாக பாரத்தார்கள், வாய் பொத்தி சிரித்தார்கள். ஆனால் இந்திய அணி தோல்வியை நோக்கி இருந்தபோது, களமிறங்கி போட்டியை டிரா செய்ததே பார்த்தீவ் தான்.
உயரமோ, வயதோ சாதிக்க ஒரு தடையில்லை என்பது தான் வரலாறு கத்துக்கொடுத்திருக்கும் விஷயம். இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட் ஒரு மதம். மூன்று வயது சிறுவர்கள் கூட இப்போதெல்லாம் வீட்டில் பேட் பிடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்தியாவில் அத்தனை பேரையும் கட்டிப்போடும் விளையாட்டு கிரிக்கெட். சோம்பேறி விளையாட்டு, சூதாட்ட விளையாட்டு என பல சமயங்களில் பல விதமான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும் கூட, கிரிக்கெட் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
நேற்றும், இன்றும் ஐந்து வயது சிறுவன் கிரிக்கெட் ஆடும் வீடியோ ஒன்று டிரெண்டிங்கில் இருக்கிறது. டெல்லியில் நடந்த டி 20 போட்டி ஒன்றில் இந்தச் சிறுவன் விளையாடியிருக்கிறான். ஸ்டம்ப் உயரம் அளவுக்குத் தான் இருக்கிறார் இந்த சிறுவன். டி20 போட்டி ஒன்றில் பேட்டிங் செய்ய தலை முதல் கால் வரை பாதுகாப்பு கவசங்களை அணிந்து கொண்டு மைதானத்துக்குள் வரும் சிறுவனை பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கிறது.வீடியோ இங்கே!
அந்த கியூட் சிறுவனின் பெயர் ருத்ர பிரதாப் என கண்டறிந்துச் சொல்லியிருக்கிறார்கள். பொதிகை டிவியில் ஒளிபரப்பான ஆதாரத்தோடு வரும் இந்த வீடியோவும், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான போட்டி எனச் சொல்கிறார்கள். இந்த போட்டி நடந்த என்ன இலக்கு நிர்ணயிக்கப்பட்டது, ருத்ர பிரதாப் எவ்வளவு ரன்களை அடித்தார் என்பது உள்ளிட்ட சரியான விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்பட வில்லை.
சரி விஷயத்துக்கு வருவோம், பதினான்கு வயது சிறுவர்கள் ஆடும் போட்டியில் களமிறங்கிய இந்தச் சிறுவன், அப்படியே சச்சினை நினைவுபடுத்தும் விதமாக விளையாடுகிறார். தேவையற்ற பந்துகளை அடிக்காமல் விட்டு விடுகிறார். நல்ல பந்துகளை, அபாரமாக ஆடுகிறார். அழகாக கட் செய்கிறார், கியூட்டாக டிரைவ் செய்கிறார், அபாரமாக ஃபிளிக் செய்கிறார். இன்னும் சில ஆண்டுகளில் ரஞ்சி போட்டிகளிலோ, அதைத் தொடர்ந்து இந்திய அணிக்கோ இந்த கியூட் பையன் ஆடலாம். நாம் வாழ்த்துவோம்!
குறிப்பு : -
1. ரஞ்சி போட்டிகளை பொறுத்தவரை, ஸ்வப்னில் சிங், 14 வயது 355 தினத்தில் ரஞ்சி போட்டியில் அறிமுகமானார். ரஞ்சி போட்டியில் மிகக் குறைந்த வயதில் அறிமுகமான வீரர் இவர் தான்.
2. முதன் முதலில் ரஞ்சிப் போட்டியில் முச்சதம் அடித்த வீரர் ஜாபர் தான். அப்போது அவருக்கு வயது வெறும் பதினெட்டு!
Comments
Post a Comment