நாடா புயல் எச்சரிக்கை 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு



சென்னை

தென் கிழக்கு வங்க கடலில் இலங்கைக்கு அருகே சில நாட்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.  அது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது. தற்போது புயலாக மாறியுள்ளது. அதற்கு ‘நாடா’ புயல் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயல் 2-ந்தேதி  அதிகாலை சென்னைக்கும், வேதா ரண்யத்திற்கும் இடையே கடலூர் அருகே கரையை கடக்கும் என கூறப்பட்டு உள்ளது.

இந்தப் புயல் காரணமாக சென்னை மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் நாளை அதிகாலை முதல் மழை பெய்யத் தொடங்கும். அதன் பிறகு மழை மேலும் அதிகரிக்கும்.2-ந்தேதி முதல் மழை அளவு மேலும் அதிகரிக்கும். அப்போது தமிழ்நாடு மற்றும் புதுவை முழுவதும் பலத்த மழை பெய்யும். அதன்பிறகு உள் மாவட்டங்களிலும் மேலும் பரவி அதிக அளவில் மழை கொட்டும். கடலோர மாவட்டங்களில் பலத்த மற்றும் மிகபலத்த மழை பெய்யும். என சென்னை வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

இதை தொடர்ந்து தமிழக அரசு  சென்னை,காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், நாகை,  ஆகிய 5 மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து உள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் மரக்கானம் , வானூர் ஆகிய 2 தாலுகா பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கபட்டு உள்ளது

Comments