Skip to main content

நாடாளுமன்ற முடக்கத்தால் 7 நாட்களில் ரூ.22 கோடி இழப்பு



பண மதிப்பு நீக்க விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவை களும் முடங்கிவரும் நிலையில் கடந்த 7 நாட்களில் சுமார் ரூ.22 கோடி வீணாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பிரச்சினை களை முன்வைத்து நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபடுவது வழக்கமாகி விட்டது. இதனால் கேள்வி நேரம் முடங்கி முழுமையாக நடைபெறுவதில்லை. திட்டமிட்டபடி புதிய மசோதா மற்றும் துணை மசோதாக்களை அறிமுகப்படுத்த முடிவதில்லை. ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட மசோதா மீது விவாதம் நடத்தி, அதை நிறைவேற்ற முடிவதில்லை. சட்டத் திருத்த மசோதாக்களும் நிலுவையில் வைக்கப்படுகின்றன. அரசின் முடிவின்படி மசோதாக் களை வாபஸ் பெறவும் முடிவதில்லை.
மத்திய அரசால் அவ்வப்போது அமைக்கப்படும் குழுக்களின் பரிந்துரைகளையும் ஆராய்ந்து ஏற்க முடியாமல் போகிறது. இதனால் குழுக்கள் அமைக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறாமல் போகி றது. அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளையும் முறையாக விவாதித்து ஒரு முடிவுக்கு வரமுடியாமல் போகிறது. அன்றா டம் சமர்ப்பிக்கப்படும் ஆண்டறிக் கைகள் மீதான குறைகளையும் அவையின் கவனத்துக்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. பொதுமக்களுக்கு இதுபோன்ற இழப்புகள் ஒருபுறம் இருக்க, அவர்களின் வரிப்பணமும் வீணாகி வருகிறது.
மற்ற துறைகளை போல நாடாளுமன்ற செயல்பாட்டுக்கும் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டுக்கான (2016-17) பட் ஜெட்டில் மக்களவைக்கு ரூ.623.29 கோடியும், மாநிலங்களவைக்கு ரூ.376.19 கோடியும் ஒதுக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவை களும் ஆண்டுக்கு அதிகபட்சமாக 100 நாட்கள் கூடுகின்றன. ஆனால் இடையில் வரும் விடு முறை நாட்கள் தவிர்த்து இரு அவைகளும் சுமார் 70 நாட்கள் செயல்படுகின்றன. இதில் மக்களவை நாள் ஒன்றுக்கு சுமார் 6 மணி நேரமும் மாநிலங்களவை 5 மணி நேரமும் செயல்படுகின்றன. இதன் அடிப்படையில் ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் எதிர்க்கட்சி களின் அமளியால் வீணாகும் வரிப்பணம் நாம் தோராயமாகக் கணக்கிட முடியும்.
இது குறித்து நாடாளுமன்ற கணக்கு பிரிவுகளின் உயரதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறும்போது, “நடப்பு நிதியாண்டில் இரு அவைகளும் செயல்பட ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக ரூ.35 லட்சம் செலவாகிறது. இதில் கடந்த நவம்பர் 16-ல் தொடங்கி 25-ம் தேதி வரையிலான 7 நாட்களில் நாடாளுமன்றத்தின் 80 சதவீத பணிகள் முடங்கின. இதனால் மக்கள் வரிப்பணம் சுமார் ரூ.22 கோடி வீணாகியிருக்கலாம். நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது, பொதுப் பணித் துறை, பாதுகாப்புப் படை என பல்வேறு துறையினரும் இணைந்து பணியாற்றுகின்றனர். இவர்களுக்கான அன்றாட செலவு கள் இந்த ரூ.22 கோடியில் சேர்க்கப்படவில்லை. இதையும் சேர்த்தால் வீணாகிய தொகை அதிகரிக்கும்” என்றனர்.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 16 முதல் டிசம்பர் 16 வரை மொத்தம் 22 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கூட்டத்தொடர் தொடங்கிய மறு நாள் முதல், பண மதிப்பு நீக்க விவகாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த கூட்டத் தொடரில், 9 மசோதாக்களை அறிமுகப்படுத்தவும், நிறைவேற்ற வும் திட்டமிடப்பட்டிருந்தது.இரு மசோதாக்களை வாபஸ் பெறவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 7 நாட்களில் இது வரை ஒரு மசோதாவும் அவைகளில் எடுக்கப்படவில்லை

Comments