2017-ம் ஆண்டு இறுதியில் வெளியாக உள்ளது ஆப்பிளின் ஐபோன் 8 ஸ்மார்ட்போன். இதில் 3D கேமராவை சேர்க்க ஆப்பிள் முயன்று வருவதாக கொரியாவில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது. LG நிறுவனத்திடம் உள்ள 3D கேமரா தொழில்நுட்பத்தை ஆப்பிள் ஐபோன் 8ல் சேர்க்க விரும்புகிறதாம். ஐபோன்8ல் 3D டச் சென்சார் ஸ்க்ரீனிலேயே இருக்குமாம்.
மேலும், அதிவேகமான A11 ஃப்யூஷன் ப்ராசஸர், மூன்று ஸ்க்ரீன் சைஸ் ஆப்ஷன்கள், Always on Display என நிறைய வசதிகள் ஐபோன் 8ல் சேர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Comments
Post a Comment