Skip to main content

8 பேரை கொன்று புதைத்த சப்பாணிக்கு மனநல பரிசோதனை


8 பேரை கொன்று புதைத்ததாகக் கைது செய்யப்பட்ட சப்பாணிக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் மனநல பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்டம் திருவெறும் பூர் அருகே உள்ள வேங்கூர் நடுத் தெருவைச் சேர்ந்தவர் தங்க துரை(34). கடந்த செப்டம்பர் 7-ம் தேதி வீட்டில் இருந்து சென்ற வர், மீண்டும் திரும்பவில்லை. போலீஸார் நடத்திய விசார ணையில், கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சப்பாணி(35) என்பவர் தங்கதுரையை கொலை செய்தது தெரியவந்தது.
அப்போது, தங்கதுரையை மட்டுமின்றி, நகை மற்றும் பணத் துக்கு ஆசைப்பட்டு தன் தந்தை தேக்கன்(75) உட்பட மொத்தம் 8 பேரை கொலை செய்ததாக சப்பாணி வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து திருவெறும்பூர் போலீஸார் சப்பாணியை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சப்பாணியை தனிமைச் சிறையில் அடைத்து வைத்துள்ளதாகவும், டிராயர் மட்டுமே அணிந்துகொள்ள அனுமதிப்பதாகவும் கூறி திருச்சி மத்திய சிறை நிர்வாகத்துக்கு எதிராக ஜே.எம்-6 நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, சப்பாணி மனநலம் பாதிக்கப்பட்டவரா? இல்லையா என திருச்சி அரசு மருத்துவ மனையில் பரிசோதனை செய்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறும்போது, “நீதிமன்ற உத்தரவின்பேரில் சப்பாணிக்கு திருச்சி அரசு மருத்து வமனையில் மனநல பரிசோ தனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக அவர், மருத்துவ மனையில் 10 நாட்கள் தங்க வைக்கப்பட்டு, அரசு மருத்துவர் களின் கண்காணிப்பில் இருப் பார். அதன் பின்னர், சப்பாணி யின் மனநலம் குறித்து, மருத்து வர்கள் அளிக்கும் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் படும். நீதிமன்றம் அளிக்கும் உத் தரவு அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்” என்றனர்

Comments