'சம்பளமும் வாங்க மாட்டேன், விடுப்பும் எடுக்க மாட்டேன்'- ட்ரம்ப்

அடுத்த ஆண்டு ஜனவரி 20ல் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப், தான் அமெரிக்க அதிபராக பணியாற்றுவதற்கு சம்பளம் வாங்க மாட்டேன் என்றும், எந்த விடுப்பும் எடுக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ட்ரம்ப் அளித்த பேட்டி ஒன்றில், 'சட்டப்படி நான் ஒரு டாலராவது சம்பளமாக பெற்றுக் கொள்ள வேண்டும். அதனால் அதனை பெறுவேன். நாம் செய்ய வேண்டிய வேலை அதிகமாக இருக்கிறது. மக்களுக்காக அவைகளை நான் செய்து முடிப்பேன். அதிக வேலைகள் இருப்பதால், நான் எந்த விடுமுறையும் எடுத்துக் கொள்ளமாட்டேன்' என்று கூறியுள்ளார்.

Comments