Skip to main content
தமிழகத்தில் இன்று மாலை முதலே மழை பெய்ய வாய்ப்பு
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுப்பெற்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழகம் மற்றும் புதுச்சேரி தலைமைச் செயலாளர்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கடிதம் அனுப்பியுள்ளது.சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் அனுப்பியுள்ள இந்த கடிதத்தில், அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற வாய்ப்புள்ள காற்றழுத்தம், நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நெருங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இன்று மாலை முதல் மழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒன்று மற்றும் இரண்டாம் தேதிகளில் தமிழக கடலோரப் பகுதியில் ஒரு சில இடங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், கடலில் இருக்கும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டில் பலத்த மழையால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வசதியாக தலைமைச் செயலாளர்களுக்கு வானிலை ஆய்வு மையம் கடிதம் அனுப்பியுள்ளது
Comments
Post a Comment