கடல் பறவைகளில் பல, பிளாஸ்டிக் குப்பையை ஏன் உண்கிறது என்ற கேள்விக்கு அமெரிக்க விஞ்ஞானிகள் பதில் கூறுகின்றனர்.
கடல் பறவைகளில் பெரும்பாலும், அதன் உணவை வாசனையை வைத்தே கண்டுபிடிக்கின்றன. பிளாஸ்டிக்கில் இருந்து வெளியேறும் சில வேதி பொருட்களின் வாசனையால், அதை கடல் பறவைகள் உணவு என்று நினைத்து சாப்பிட்டு விடுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இது பற்றி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்,'கடல் பறவைகள், வாசனையை வைத்து தான் பெரும்பாலும் அதன் உணவைத் தேடுகின்றன. எனவே, பிளாஸ்டிக்கில் இருந்து வெளியேறும் வாசனையை உணவாக நினைத்து அதை உட்கொண்டு விடுகின்றன.' என்று கூறியுள்ளனர்.
Comments
Post a Comment