இந்தியாவும் பாகிஸ்தானும் தமக்கிடையிலான நதி நீர் பங்கீடு தொடர்பான பிரச்சினைகளை, பேசித் தீர்த்துக்கொள்ளும் என நம்புவதாக, ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் எல்லை தாண்டிய தீவிரவாத நடவடிக்கைகளைப் பாகிஸ்தான் ஊக்குவித்து வரு வதால், இரு நாடுகளுக்கு இடை யிலான நட்புறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, கடந்த வாரம் பஞ்சாப் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி நதிகளில் இருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்படும் நீர் நிறுத்தப்பட்டு காஷ்மீர் உள்ளிட்ட இந்திய பகுதிகளில் வேளாண் பணி களுக்கு பயன்படுத்தப்படும்’ எனக் கூறினார்.
இதுதொடர்பாக ஏற்கெனவே கையெழுத்தான நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இவ்விவகாரம் குறித்து ஐ.நா பொதுச் சபை விவாதம் ஒன்றில் குறிப்பிட்டு பேசிய பாகிஸ்தான் தூதர் மலீஹா லோதி, ‘அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுப்ப தற்கோ, போருக்காகவோ, தண்ணீரை ஒரு கருவியாக பயன்படுத்தக் கூடாது’ என்றார்.
இந்நிலையில், நியூயார்க்கில் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபேன் டுஜாரிக் திங்கள் கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தபோது, இவ்விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ஸ்டீபேன், ‘நதி நீர் தொடர்பான விவகாரங்களை நாங்கள் ஆராய்வோம். எனினும், இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களுக்குள்ளா கவே, நதி நீர் பங்கீட்டு பிரச்சினையை பரஸ்பரம் பேசித் தீர்த்துக்கொள்வார்கள் என நம்புகிறோம்’ என்றார்.
அதே சமயம், காஷ்மீரில் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியில் அமைதியின்மை நிலவுவது ஐ.நா பொதுச் செயலாளருக்கு பெரும் கவலையாக உள்ளது. எல்லைப் பகுதியில் உயிரிழப்பு நேராத வகையில், அமைதியை யும், ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்த முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்
Comments
Post a Comment