பெண்கள் பயத்தை கைவிட வேண்டும் : ஐஸ்வர்யா தனுஷ் பேச்சு

பெங்களூரு: பெங்களூருவில் உலக பெண்கள் அமைப்பின் சார்பில் பிஷப்காட்டன் ஆண்கள் பள்ளிக்கூடத்தில் “அவனுக்காக அவள் என்ற பெயரில் மூன்று நாட்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது. இதன் தொடக்க விழாவில் ஐக்கிய நாடுகள் சபை பெண்கள் நலனுக்கான நல்லெண்ண தூதரான ஐஸ்வர்யா தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:

ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பெண் குழந்தைகளின் நலனிற்காக முயற்சி தொடங்கப்படவேண்டும். வளரும் போதே நமது குழந்தைகளிடம் இதை புரிய வைக்கவேண்டும். உலகம் முழுவதும் ஒரே இரவில் பெண்களுக்கு எதிரான எண்ணங்களை மாற்றிட முடியாது என்பதால் வளரும் குழந்தைகளிடம் ஆண்-பெண் இரு பாலரும் சமம் என்கிற கருத்தை விதைக்கவேண்டியது அவசியமாகும். 

பெண்களுக்கு எதிரான உடல்ரீதியான தாக்குதலுடன் உளவியல் தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான எதிர்மறை எண்ணங்கள் மாறவேண்டும் என்றால் அது ஒவ்வொரு தாயின் வளர்ப்பில்தான் இருக்கிறது. இவ்வாறு ஐஸ்வர்யாதனுஷ் பேசினார்.

Comments