Skip to main content

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம்: டிசம்பரில் படப்பிடிப்பு துவக்கம்

இயக்குநர் விஜய் சந்தர் மற்றும் விக்ரம் | கோப்பு படம்

'வாலு' விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் விக்ரம்.
சிம்பு, ஹன்சிகா நடிப்பில் வெளியான 'வாலு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விஜய் சந்தர். அப்படத்தைத் தொடர்ந்து தனது படத்துக்காக கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். மீண்டும் சிம்பு நாயகனாக வைத்து 'டெம்பர்' ரீமேக்கை இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அப்படத்தின் ரீமேக் பேச்சுவார்த்தைக்கு தடை ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு நாயகர்களை சந்தித்து கதை கூறி வந்தார் விஜய் சந்தர். அவர் கூறிய கதை பிடித்துவிடவே, விக்ரம் உடனடியாக தேதிகள் ஒதுக்கியிருக்கிறார். டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்க இருவரும் திட்டமிட்டு இருக்கிறார்கள். இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற இருக்கிறது.
மேலும், விஜய் சந்தர் இயக்கும் படத்தில் நடித்து முடித்தவுடன் 'சாமி 2' படத்தில் கவனம் செலுத்தவிருக்கிறார் விக்ரம்

Comments