வங்கிகளில் தேவையான அளவு பணம் இருப்பதாகவும், நாடு முழுவதும் ரூபாய் நோட்டுகள் சென்றடையும் வகையில், போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும். வங்கிகளில் தேவையான அளவு பணம் இருக்கிறது. நாடு முழுவதும் ரூபாய் நோட்டுகள் சென்றடையும் வகையில் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வங்கிக் களைகள் நவம்பர் 10-ம் தேதியில் இருந்து ரூபாய் நோட்டுகளை மாற்ற ஆரம்பித்து விட்டன'' என்று கூறியுள்ளது.
ஏடிஎம்.களில் சிலவற்றில்தான் பணம் இருக்கிறது என்றும், போதிய ஏ.டி.எம்.கள் திறக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) முதல், நிறைய ஏடிஎம்கள் இயங்க ஆரம்பித்து விட்டதாகவும் , மற்ற வங்கிகள் தங்களுடைய ஏடிஎம்களை மறுநிரப்பல் செய்யக் கொஞ்சம் அவகாசம் எடுக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

Comments
Post a Comment