திருப்பூரில் தோழியின் பங்களாவில் மதன் தொடர்புடைய ஆவணங்கள் எரிப்பு?

எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி யில் இளநிலை, முதுநிலை மருத் துவப் படிப்புக்கான சீட் வாங்கித் தருவதாகக் கூறி 123 பேரிடம் ரூ.84 கோடியே 27 லட்சம் வசூல் செய்து மோசடி செய்ததாக வேந்தர் மூவிஸ் நிர்வாகியும் திரைப்பட விநியோகஸ்தருமான மதன் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கடந்த மே 29-ம் தேதி கடிதம் எழுதி விட்டு அவர் தலைமறைவானார். இந்நிலையில், கடந்த 20-ம் தேதி திருப்பூரில் அவரது தோழி வர்ஷா என்பவரது வீட்டில் கைது செய்யப் பட்டது குறித்து விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்:
திருப்பூரில் படித்து வளர்ந்தவர் வர்ஷா(38). தந்தை சண்முகம். தாய் உஷா. பெற்றோருக்கு இவர் ஒரே மகள். ஃபேஷன் டிசைனிங் படித்துள்ளார். அதன் பின்னர், திருப் பூரைச் சேர்ந்த ஒருவருடன் திரு மணம் நடந்தது. இருவருக்கும் ஏற் பட்ட கருத்து வேறுபட்டால் விவா கரத்து பெற்றுள்ளனர். இவரது 2 மகன்கள், அவிநாசி அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
திருப்பூர் அவிநாசி சாலை பகுதியில் பெண்களுக்கான ஆடை கள் தைக்கும் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார் வர்ஷா. குடும்பத்துடன் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமுருகன்பூண்டி பகுதியில் வாடகை வீட்டில் குடியேறியுள்ளார். தற்போது அங்குதான் வசித்து வருகிறார். மதனின் மனைவியுடன் ஏற்கெனவே இருந்த நெருக்கத்தால், வர்ஷாவுக்கு மதனின் நட்பு கிடைத்துள்ளது.
மணிப்பூரில் மதன் இருந்தபோது, வர்ஷாவிடம் அடிக்கடி போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். மேலும், வர்ஷாவும் சமீபத்தில் அலைபேசி எண்ணை மாற்றியுள் ளார். அதிலும், மதன் பல முறை தொடர்புகொண்டதாகக் கூறப்படு கிறது. இதையடுத்து, ஒரு மாத காலத்துக்கு முன்பே மதன் திருப்பூர் வந்துள்ளார். தொடர்ந்து, மதனை காரில் கோவைக்கு அடிக்கடி அழைத்துச் சென்றுள்ளார் வர்ஷா. அப்போது, மதனை பின்பக்கம் அமர வைத்துக்கொண்டு, வர்ஷாவே காரை ஒட்டியுள்ளார். காரின் கண் ணாடிப் பகுதியில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதால் குடியிருப்புப் பகுதியில் இருந்தவர்களுக்கு எவ்வித சந்தேகமும் எழவில்லை.
அவரது வீட்டில் இருந்த மதனை சென்னையில் இருந்து வந்த தனிப் படை போலீஸார் கைது செய்த துடன், மீடியாக்களிடம் எதுவும் பேசக்கூடாது என உத்தரவிட்டுள்ள னர். அத்துடன், வீட்டில் இருந்த அலைபேசிகள், மடிக்கணினி ஆகிய வற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், திருமுருகன் பூண்டி பேரூராட்சி சார்பில் பெண் கள் சிலர் கொசு மருந்து அடிக்க நேற்று வந்துள்ளனர். அப்போது, அவர்களிடம் வெளியே மட்டும் அடித்துவிட்டுச் செல்லுங்கள் என்று கூறியுள்ளனர். கதவைத் திறந்து யாரிடமும் பேசவில்லை. வீட்டின் பின்புறம் ஆவணங்கள் எதுவும் எரிக்கப்பட்டதா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்துள்ளனர்.
அதேபோல, வர்ஷா வீட்டில் இருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் இரவு நேரங்களில் மதன் திருப்பூரில் வலம் வந்துள் ளார். இதுகுறித்தும் போலீஸார் விசாரித்துள்ளனர். வீட்டின் அருகே சோதனைச்சாவடி இருந்தும், மாநகர போலீஸார் வாகனச் சோதனையில் சிக்காமல், தலைக் கவசம் அணிந்தபடி மதன் வலம் வந்தது பலருக்கும் ஆச்சரியம். மதன் தங்கியிருந்தது பற்றி எவ்வித சந்தேகமும் எழவில்லை என்கின்றனர் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள்

Comments