
திப்பு சுல்தான் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற கர்நாடக மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தன்வீர் சேட் மேடையில் தனது மொபைல் போனில் ஆபாச படம் பார்த்ததாக புகார் எழுந்துள்ளது.
கர்நாடகா மாநிலம் ராய்சூரில் கன்னடம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் கர்நாடக மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், தன்வீர் சேட் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேடையில் அமர்ந்திருந்த போது தன்வீர் சேட் தனது மொபைல் போனில் ஆபாச படம் பார்த்ததாகக் கூறப்படுகிறது. அதனை கவனித்த தனியார் தொலைக்காட்சி நிறுவன ஒளிப்பதிவாளர் படம் பிடித்துள்ளார். அந்த காட்சி நேற்று தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்த முதல்வர் சித்தராமையா அந்த அமைச்சரை தொடர்பு கொண்டு கடுமையாகக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள தன்வீர் சேட், விழா மேடையில் மைசூர் திப்பு ஜெயந்தி கொண்டாட்டங்களின் படங்களை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் அப்போது யாரோ அனுப்பிய ஆபாசப்படங்கள் தவறுதலாக வாட்சாப்பில் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment