'இவ்வளவு சொத்து சேர்த்தால் கவுன்சிலர்கள் ஏன் எம்எல்ஏ சீட் கேட்க மாட்டார்கள்'- நீதிபதி கிருபாகரன் கேள்வி
2006, 2011ல் தேர்வான சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை, ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த பொன் தங்கவேலு என்பவர், கடந்த ஆண்டு சென்னையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு நஷ்டஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், சென்னை மழை வெள்ளத்தால், தமது உடமைகள் அனைத்தையும் இழந்துவிட்டதாகக் குறிப்பிட்டு, அதற்கு மாநகராட்சி அதிகாரிகளிடம் நிவாரணம் கேட்டுள்ளார். அதற்கு மாநகராட்சி தரப்பில் போதிய வருவாய் இல்லை என பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அதிர்ச்சியடைந்த அவர், மாநகராட்சியின் கவுன்சிலர்கள் சிலர், தங்களது சொத்துக்களுக்கு குறைவான சொத்து வரியை நிர்ணயம் செய்ய அதிகாரிகளை நிர்ப்பந்திப்பதாகவும், அதனாலேயே மாநகராட்சியில் போதிய வருவாய் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த அடிப்படையில் சொத்து வரி நிர்ணயிக்கப்படுகிறது என்றும், பெரிய வீடுகளுக்கு சொத்து வரி ரூ.250 விதிக்கப்பட்டது எப்படி என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், அரண்மனை போன்ற வீடுகளுக்கு குறைந்த அளவு வரி விதிக்கப்பட்டது எப்படி என்றும், கவுன்சிலர் பதவிக்குதான் அதிக போட்டி இருக்கும். கவுன்சிலரே இவ்வளவு சொத்து சேர்த்ததை அறிந்தால் எம்எல்ஏ சீட் கேட்க மாட்டார்கள் என்று கூறியதோடு,
2006, 2011ல் தேர்வான சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் சொத்து விவரங்களை அளிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார் நீதிபதி, மேலும் வழக்கு விசாரணையை டிசம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
2006, 2011ல் தேர்வான சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் சொத்து விவரங்களை அளிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார் நீதிபதி, மேலும் வழக்கு விசாரணையை டிசம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Comments
Post a Comment