விஷாலுக்கு விக்ரம் கிருஷ்ணா என்ற அண்ணனும் ஐஸ்வர்யா என்ற தங்கையும் இருக்கிறார்கள். அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவுக்கும் நடிகை ஸ்ரேயா ரெட்டிக்கும் 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது மீண்டும் விஷால் வீட்டில் கெட்டிமேள சத்தம் கேட்கவுள்ளது. விஷாலின் தங்கையான ஐஸ்வர்யா, சிங்கப்பூரில் எம்.பி.ஏ படித்துவிட்டு தற்போது ஃபேமிலி பிசினஸில் இறங்கவுள்ளார். இவருக்கும் உம்மிடி பங்காரு நகைக்கடையினரின் குடும்பத்தைச் சேர்ந்த கிருத்தீஷ் உம்மிடி என்பவருக்கும் காதல் உண்டாகி, குடும்பத்தினரின் சம்மதத்தோடு கல்யாணம் நடக்கவுள்ளது. இந்த திருமணத்தகவலை உறுதி செய்த விஷாலின் குடும்பத்தினர், 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெறும் என்றும் கூறியுள்ளனர்.
Comments
Post a Comment