நியூசிலாந்தின் கிறைஸ்ட் சர்ச் நகரை மையமாகக் கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4ஆகப் பதிவானது.
உள்ளூர் நேரப்படி காலை 11.02 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கத்தை அடுத்து நியூசிலாந்து தெற்குக் கடல் பகுதியை ஒட்டியுள்ள மக்களுக்கு சுனாமி எச்சரிக்கையை அந்நாட்டு அரசு விடுத்துள்ளது. நிலநடுக்கம் அந்நாட்டின் வெலிங்டன், நெல்சன் உள்ளிட்ட நகரங்களில் உணரப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் நெல்சன் நகரில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தனர். நிலநடுக்கத்தை அடுத்து பாகிஸ்தான் வீரர்கள் ஹோட்டல் அறையிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கிறைஸ்ட் சர்ச் நகரில் கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment