'இந்தியாவின் மென்பொருள், ஜப்பானின் வன்பொருள்...!'- மோடி பெருமிதம்

 
மூன்று நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று காலை  ஜப்பான் அரசர் அக்கிஹிட்டோவை சந்தித்துப் பேசினார்.
பின்னர் டோக்கியோவில் ஜப்பானின் உயர்மட்ட தொழிலதிபர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO's) பங்குபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, ''மேட் இன் இந்தியா மற்றும் மேட் இன் ஜப்பான் இணைந்து செயல்பட வேண்டும். இந்தியாவின் மென்பொருள் சக்தியை ஜப்பானின் வன்பொருள் (Hardware) சக்தி பூர்த்தி செய்யும்.
உலகின் மிகத் திறந்த பொருளாதாரமாக (most open) இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் முதலீடு செய்ய ஜப்பான் முதலீட்டாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்” என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தை தொடர்ந்து, ஜப்பான் பிரதமருடனான சந்திப்பின்போது,  இந்தியா-ஜப்பான் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments