பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பபடும் என சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனாலும் மருத்துவமனை, பெட்ரோல் பங்க்குகளில் பழைய ரூபாய் நோட்டுகள் செல்லும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த ஜகதீஷ்-கிரண்சர்மா தம்பதியின் பச்சிளம் குழந்தை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது. அங்கு மருத்துவ கட்டணத்தை செலுத்துவதற்கு ஜகதீஸ் தம்பதி பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை தந்துள்ளனர். ஆனால், அதை வாங்க மறுத்த மருத்துவமனை நிர்வாகம் அவர்களை வீட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளது. மேலும், குழந்தையின் நோய் விவரங்கள் அடங்கிய கேஷ் ஃபைலையும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து உடல்நிலை மோசமடைந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது
Comments
Post a Comment