கைதானவர்கள் வெடிகுண்டை வெடிக்க வைத்தவர்கள்: பகீர் தகவல்!

அல்-கொய்தா இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக மதுரை மற்றும் சென்னையில் இன்று கைது செய்யப்பட்ட சுலைமான், அப்பாஸ் அலி, சம்சுதீன் கரீம் ராஜா ஆகியோர் கேரளா மலப்புரம் நீதிமன்றம், கொல்லத்தில் உள்ள நீதிமன்றம், ஆந்திரா மாநிலம் சித்தூர் நீதிமன்றம், நெல்லூர் பொது இடம், கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள நீதிமன்றம் ஆகிய இடங்களில் கடந்த ஆறு மாதங்களில் தொடர்ச்சியாக வெடிகுண்டுகளை வைத்து வெடிக்கச் செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போன், எலக்ட்ரானிக் டிவைஸ், அடிப்படை வாத இயக்கம் சம்பந்தப்பட்ட பதாகைகள் ஆகியவற்றை வைத்து தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருவதாக ஹைதராபாத் போலீசார் தெரிவித்து இருக்கிறார்கள்.

Comments