சேலம்: சேலம், மணியனூர், காந்தி நகரை சேர்ந்தவர் பிரகாஷ், 22. கடந்த, 8ல், பையில் மடிக்கணினியுடன், இரும்பாலையில் இருந்து, சேலத்திற்கு, அரசு பஸ்சில் வந்தார். புது பஸ் ஸ்டாண்ட் வந்ததும், பையை எடுத்துக்கொண்டு, பஸ்சில் இருந்து இறங்கினார். கணம் இல்லாததால், சந்தேகம் அடைந்து, பையை திறந்து பார்த்தபோது, மடிக்கணினி மாயமாகி இருந்தது. அதிர்ச்சியடைந்த பிரகாஷ், பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். விசாரணையில், புது பஸ் ஸ்டாண்டில் சுற்றித்திரிந்த, கிருஷ்ணகிரியை சேர்ந்த, சத்தியஅரசன், 23, என்பவர், பஸ்சில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி, மடிக்கணினி திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும், அவரது தாய் நிர்மலா, கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.எஸ்.ஐ.,யாக பணிபுரிவதும், சேலத்தில், பிரகாஷ் ஊர்சுற்றி வந்ததும் தெரியவந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.
Comments
Post a Comment