சேலம் : ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்த பிரதமர் மோடியை கண்டித்து, சேலத்தில் பாய், தலையணையுடன் வந்து கனரா வங்கி வாசலில் படுத்து வாலிபர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். இதனால் சாதாரண மக்கள், வங்கிகளில் பணத்தை மாற்ற முடியாமல் அவதிப்படுகின்றனர். இதையடுத்து மத்திய அரசை கண்டித்து ஆங்காங்கே பல்வேறுவிதமான போராட்டங்கள் நடந்து வருகின்றன. நேற்று சேலத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும் இணைந்து கோட்டை மைதானத்தில் இருந்து ஊர்வலமாக சென்று கனரா வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பிரவீன்குமார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில செயலாளர் ஜோதிலட்சுமி ஆகியோர் தலைமை வகித்தனர்.
வாலிபர் சங்கத்தினர், பாய், தலையணையை கனரா வங்கி வாசலில் விரித்து படுத்து மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது இரு தரப்பினரிடையேயும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பெண்கள் உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து மாவட்ட செயலாளர் பிரவீன்குமார் கூறுகையில், ``கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்க கூடிய 900 பேரின் பட்டியலை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, அன்றாடம் உழைக்கும் மக்களை வங்கி வாசலில் குடியிருக்க செய்து விட்டார். இதை எடுத்துரைக்கும் வகையில்தான் பாய், தலையணையுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டோம். `` என்றார்.

Comments
Post a Comment