ஐஎஸ்எல் தொடரில் நேற்று மும்பை யில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எப்சி - மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதின. 32-வது நிமிடத்தில் மும்பை அணி முதல் கோலை அடித்தது. சுனில் ஷேத்ரி உதவியுடன் இந்த கோலை மத்தியாஸ் டிபெடரிகோ அடித்தார்.
முதல் பாதியில் மும்பை அணி 1-0 என முன்னிலை பெற்றது. 60-வது நிமிடத்தில் மும்பை நட்சத்திர வீரர் டிகோ புளோரன் கொடுத்த கிராஸை நெஞ்சால் தடுத்து நிறுத்திய கிறிஸ்டியன் வடாக்ஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் அதனை கோலாக மாற்றி அசத்தினார்.
சென்னை அணியால் கடைசி வரை போராடியும் கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் மும்பை அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மும்பை அணிக்கு இது 6-வது வெற்றியாக அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி 22 புள்ளிகளுடன் முதல் அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
Comments
Post a Comment