ஏடிஎம் மையங்கள் செயல்படாததால் பொறுமையிழந்த மக்கள் தில்லியில் கடைகளை சூறையாடினர்

people-loot-a-mall-in-east-Delhi
தில்லியில் பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் செயல்படாததால் பொறுமையிழந்த மக்கள் மெட்ரோ மாலில் நுழைந்து உணவுப்பொருட்களை அள்ளிச்சென்றனர். 

நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். அறிவிப்பை தொடர்ந்து 10ம் தேதி முதல் வங்கிளில் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு பதில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றிக்கொள்ளும் வசதி தொடங்கியது.

ஆனால் பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பப்படவில்லை. இதனால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தேவையான அளவு பணம் பெற்றுக் கொள்ளமுடியாமல் அவதிக்கு ஆளாகிவருகின்றனர். இந்நிலையில் பொறுமை இழந்த மக்கள் கிழக்கு தில்லி மெட்ரோ மாலில் நுழைந்து உணவுப்பொருட்களை அள்ளிச்சென்றனர். 

இதே போல் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் உணவுப்பொருட்கள் தரமறுத்த கடையில் இருந்து உணவுப்பொருட்களை மக்கள் சூறையாடிச்சென்றனர்.

Comments