அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ள டொனால்டு ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்து சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. தேர்தல் பிரசாரத்தின் போது ட்ரம்ப், சீனாவால் அமெரிக்க பொருளாதாரத்தில் இழப்பு ஏற்படுவதாக விமர்சித்துப் பேசியிருந்தார். இதுமட்டுமல்லாது, சீனாவுக்கு எதிராக மேலும் பல விமர்சனங்களையும் முன்வைத்து பிரசாரம் செய்தார். எனவே ட்ரம்ப் அதிபர் ஆனதில் சீனாவுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக சீன உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் ட்ரம்ப்பின் தன்னிச்சையாக செயல்படும் கொள்கை மற்றும் தலையீட்டுவாதத்தை (U.S. isolationist policies) மாற்றி, சீனாவுடன் சமநிலையான உறவை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவை எச்சரிக்கை விடுத்துள்ளன.
Comments
Post a Comment