ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்... அரையிறுதியில் சிந்து, சாய்னா மோத வாய்ப்பு


Saina sindhu
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைகளான சாய்னா நேவால் மற்றும் பி.வி. சிந்து ஆகியோர் மோதும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இன்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பானின் சகாயா சாட்டோவை சாய்னா நேவால் எதிர்கொண்டார். இந்த போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சாய்னா, 21-18, 9-21, 21-16 என்ற செட் கணக்கில் சாட்டோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். பாரம்பரிய சீன ஓப்பன் பேட்மிண்டன் தொடரை வென்று பார்மில் உள்ள மற்றொரு இந்திய வீராங்கனையான பி.வி. சிந்து, முதல் சுற்றில் யூலியா யோசபினை வென்றார். இரண்டாவது சுற்றில் தைவான் வீராங்கனை ஹுசு யா சிங்கை சிந்து இன்று எதிர்கொள்கிறார். சாய்னா நேவால் மற்றும் பி.வி.சிந்து ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறும்நிலையில், இருவரும் மோதும் நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments